இலங்கைசெய்திகள்

பிரான்ஸில் யாழ். மாநகரசபை முதல்வர்!!

Jaffna. Chief of the Municipality

பிரான்ஸ் நாட்டிலுள்ள Vitry மாநகர சபை முதல்வருடன் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் அவர்கள் கலந்துரையாடினார்
இவ் கலந்துரையாடலில் இரண்டு மாநகர சபை முதல்வர்களும் தங்களுடைய மாநகர சபையின் செயற்பாடுகள் அதிகாரகங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர்.
அத்துடன் யாழ்.மாநகர முதல்வர் அவர்கள் யாழ்.மாநகர சபை கட்டிடம் மற்றும் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தென் ஆசியாவின் முதல் தரமான பொது நூலகம் எரியூட்டப்பட்டமை தொடர்பிலும் கருத்துக்களைத் தெரிவித்தார். அதுடன் சிறிலங்கா அரசாங்கம் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் வேண்டி நிற்கின்றார்கள். அவர்களின் பிரதிநிதிகளாக நாமும் உங்களிடம் அக் கோரிக்கையினை முன்வைக்கின்றோம். எமக்கான நீண்டகால அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் ஒரு சமஸ்டி முறையிலான தீர்வினைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நீங்கள் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். பிரான்ஸ் அரசாங்கத்தில் உள்ள உங்கள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை தெரியப்படுத்தி அவர்கள் பாராளுமன்றத்தில் எமக்கான நீதியைப் பெறுவதற்கு தமிழ் மக்களுக்காக குரல் எழுப்புவதற்கான உந்து சக்தியாக நீங்கள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பில் விளக்கமளித்த Vitry மாநகர முதல்வர் தமிழ் மக்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாகவும் இங்குள்ள பல தமிழ் அமைப்புகளுடன் தாம் நெருக்கமாக பணியாற்றுவதாகவும் எனவே இது தொடர்பில் தாம் தொடர்ந்தும் பலவேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபை சார்பில் எமக்கு தரப்பட்ட கோரிக்கை கடிதத்தினை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் இது தொடர்பில் நாம் அடுத்து வரும் சபை அமர்வுகளில் கலந்தாலோசித்து எவ்வாறான வகையில் யாழ்.மாநகர சபையுடன் இணைந்து பணியாற்றலாம் என்பதனைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
Vitry மாநகரசபையின் திண்மக்கழிவற்றல் முறைமை மற்றும் இங்குள்ள கைத்தொழில் நிலையங்களுக்கு நேரில் சென்று அதன் செயற்பாடுகளை அறிவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு தருவதாகவும் தெரிவித்தார்.
Vitry மாநகர சபையில் நடைபெற்ற இக் கலந்துரையடலில் Vitry மாநகர சபையின் முதல்வர் மற்றும் அதன் பிரதி முதல்வர்கள், யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், ஏவைலச மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்.மாநகர சபை சார்பில் Vitry மாநகர முதல்வருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் Vitry மாநகர முதல்வரும் நினைவுச் சின்னங்களை வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button