இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை

எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடம் சுமார் 500 மில்லியன் டொலர் கடன் தொகையொன்றை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

நாட்டில் நிலவி வரும் அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இவ்வாறு கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

நாட்டில் எரிபொருள் கையிருப்பு பற்றி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் வெளியிட்ட கருத்தை தொடர்ந்து இவ்வாறு அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ள உள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நாட்டின் பிரதான அரசாங்க வங்கிகள் இரண்டிற்கு 3.3 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் தொகை பெற்றுக்கொள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரம் ஊடாக பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த கடன் தொகை குறித்த உடன்படிக்கையில் இரு நாடுகளினதும் அதிகாரிகள் கைச்சாத்திட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button