உலகம்செய்திகள்

கிரெட்டா துன்பெர்க் வெளியிட்டுள்ள விமர்சனம்!

கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி எனக் கூறி, இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிளாஸ்கோவில் பருவநிலை மாநாடு நடக்கும் இடத்திற்கு வெளியே சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் ஒரு பேரணியில் பங்கேற்று உரையாற்றுகையில்,

‘காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் ஒரு வார காலமாக உலகத் தலைவர்கள் வெற்றுப் பேச்சை பேசியுள்ளனர். இந்த மாநாடு படுதோல்வி என்பதை யாருக்கும் சொல்லித் தெரியத் தேவையில்லை. இது ஒரு கண் துடைப்பு மாநாடு.

விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் தொடர்பாக அறிவியல் ரீதியாக முன்வைக்கும் உண்மைகளை உலகத் தலைவர்கள் புறந்தள்ள முடியாது. அதுபோலத் தான் அவர்கள் எங்களையும் புறக்கணிக்க முடியாது. உண்மையில் தலைவர்கள் வழிநடத்துபவர்களாக இல்லை. இப்படித்தான் தலைமை இருக்கிறது என்பது வேதனை’ என கூறினார்.

1995ஆம் ஆண்டிலிருந்து காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற வேண்டிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் இந்த ஆண்டு நடக்கிறது.

உலக அளவில் கார்பன் உமிழ்வு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து இந்த மாநாட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 5 அறிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 6ஆவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மாநாடு பெருந்தோல்வி என சூழலியல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button