இலங்கைசெய்திகள்

பசறை – எல்ல பிரதான வீதிக்கு பூட்டு!

road closed

சீரற்ற வானிலையால் குறித்த வீதியின் 16 ஆவது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக எல்ல – பசறை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள பாறைகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், வாகன சாரதிகள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button