இலங்கைசமீபத்திய செய்திகள்

வரலாற்றில் பதியப்படவேண்டிய சேவை நயப்பு விழா (உள்ளே முழுமையான புகைப்படங்கள்)

ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரும், சமூக ஆளுமையாளருமான உயர்திரு சரவணை கிருஷ்ணனுக்கான சேவை நயப்பு விழா நேற்று (21) மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலை மைதானத்தில் பி.ப 2.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நிகழ்வின் நாயகன் அவரின் துணைவியார் மற்றும் பிள்ளைகள் சகிதம் மட்டுவில் வடக்கு மோகனதாஸ் சனசமூக நிலையத்தில் இருந்து மேள வாத்தியங்கள் இசைக்க, விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மட்டுவில் வடக்கு – கிழக்கு மக்கள், கல்வியாளர்கள், மணிவிழா நாயகனின் மாணவர்கள், மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரக்காணக்கானோர் புடைசூழ்ந்து வர கிருஷ்ணன் செல்வரதி தம்பதியினர் விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விழா நாயகனுக்கு அழைத்துச் செல்லும் வழியில் உள்ள வீடுகளில் உள்ள மக்கள் இறைவனுக்கு வழங்குகின்ற ஒரு கெளரவத்தை கிருஷ்ணன் செல்வரதி தம்பதிகளுக்கு வழங்கியிருந்தமையை அவதானிக்ககூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அழைத்துச்செல்லும் வழிகளில் உள்ள வீடுகளைச்சேர்ந்த மக்கள் தமது வீட்டு வாசலிலே நிறைகுடம் வைத்து, மலர் மாலை அணிவித்து கெளரவித்தமையானது உண்மையில், மெய்சிலிர்க்கத் தனை்மையான விடயம் என நிகழ்வில் கலந்து கொண்ட கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

உண்மையில், ஒரு பாடசாலை அதிபர் தன்னை முழுமையாக அர்ப்ணித்து சேவையாற்றியமையாலேயே உயர்திரு கிருஷ்ணன் அவர்களுக்கு கடவுளுக்கு நிகரான ஒரு கெளரவிப்பு கிடைத்தது. இது அணைவருக்கும் ஒரு முன்மாதிரியான செயற்பாடு ஆகும்.

அத்துடன், ஒரு ஓய்வு பெற்ற அதிபருக்கு இப்படியான ஒரு கெளரவிப்பு கிடைக்கப்பெற்றமையானது யாழ்.மாவட்டத்திலேயே முதலாவது நிகழ்வாக இருக்குமென எமது இணையத்தளம் கருதுகிறது.

தொடர்ந்து, விழா மேடைக்கு அழைத்துவரப்பட்ட கிருஷ்ணன் செல்வரதி தம்பதிகள் விசேடமாக அமைக்கப்பட்ட ஆசனத்தில் அமர்த்தப்பட்டனர்.

தொடர்ந்து, வரவேற்புரை, தலைமையுரை, மதகுருமார்களின் ஆசியுரைகள், வாழத்துரைகள், விசேட விருந்தினர்களின் சிறப்புரைகள் இடம்பெற்றன.

விழா நாயகன் கிருஷ்ணன் நூற்றுக்கு மேற்பட்டவர்களால் விழா மேடையில் வைத்து, மாலை அணிவிக்கப்பட்டு வாழ்த்து மடல்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவ் கெளரவிப்பு நிகழ்வில் இன்னும் ஒரு சிறப்பமான அம்சத்தை அவதானிக்ககூடியதாக இருந்து.
விழா நாயகனக்கு மட்டுவில் வடக்கு – கிழக்கு வாழ் மக்களால் அவர் மட்டுவில் வடக்கு – கிழக்கு கிராமத்திற்கு ஆற்றிய சேவைகளை அடையாளப்படுத்தி தங்க மோதிரம் அணிவித்தமையானது வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வாகும்.

இந்நிகழ்விலே விசேட விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த சாவகச்சேரி இந்துக்கல்லுரி அதிபர் சர்வேஸ்வரன், வலிகாமம் வடக்கு பிரதி கல்விப்பணிப்பாளர் சி.மதியழகன் ஆகியோர் மணிவிழா நாயகனின் மாணவர்கள் என்பதில் இருந்தே கிருஷ்ணனின் கல்வி ஆளுமை புலப்படுவதை எமது இணையத்தளம் சுட்டிக்காட்டுகின்றது.

தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்வுகள், விழா நாயகனின் ஏற்புரை, நன்றியுரையோடு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

ஒரு கெளரவிப்பு நிகழ்வை மிகவும் சிறப்பாகவும், முன்மாதிரியான நிகழ்வாக முன்னெடுத்த விழா ஏற்பாட்டுக்குழுக்கு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பாரட்டுக்களைத் தெரிவித்தனர். அத்துடன், எமது இணையத்தளமும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

அத்துடன் இந்நிகழ்வின் முழு காணொளி விரைவில் எமது ஐவின்ஸ் தமிழ் யூற்றுப் சணில் பதியப்படும். மேலும் விழாநாயகனும் எமது இணையத்தளம் மேற்க்கொண்ட நேர்காணலும் எமது யூற்றுப் சணலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேர்காணலை பார்வையிட கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.


Related Articles

Leave a Reply

Back to top button