இலங்கைசெய்திகள்

எதிர்காலத்தில் ஒரு இறத்தால் பாணின் விலை 400 ரூபாவாக இருக்கலாம் பேக்கரி சங்கம் எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் காலங்களில் ஒரு இறத்தால் பாணிண் விலை 400 ரூபாவாக இருக்கலாம் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோதுமை மாவிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பேக்கரி உற்பத்திக்குத் தேவையான கோதுமைமாவில் 75வீதத்தையே பெறமுடிகின்றது. இதன் காரணமாக பேக்கரி தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

அதேவேளை பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று ஒரு இறாத்தல் பாண் 100 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அதனை 300, 400 ரூபாவுக்குக் கூட வாங்க முடியாமால் இருக்கும்.

இதன் காரணமாக கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button