இந்தியா

ஜி – 20 தலைமைப் பொறுப்பு இந்தியா வசம்

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் முடிவில் ஜி-20 அமைப்பிற்கு இவ்வருடம் இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த வருடம் தலைமை ஏற்று நடத்தவுள்ளது.

இந்த பொறுப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜி – 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம். எனது நண்பர் நரேந்திர மோடி, உலகில் சமாதானத்தை உருவாக்கிட, அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என நம்புகிறேன் எனப்பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button