கவிதைமுத்தமிழ் அரங்கம்.

நினைவுச்சுமை – கோபிகை!!

poem

கோபுரக் கலசத்தில்
அமர்ந்திருக்கிறது
குருவிகள்….

எங்கோ ஓரிடத்தில்
ஒற்றை குயிலின்
மெல்லிய கூவல்….

பனிச்சிதறல்கள்
கரைந்துகொண்டிருக்கிறது
இலைகளின் மீது…..

தாய் நாடு நோக்கிய
என் தாகம்
நினைவுப் பயணமாய்….

வீணை மீதான
விரல்களைப் போல
மீட்டிக்கொண்டிருக்கிறேன்….

காலச்சக்கரங்கள்
உருண்டு கரைந்தாலும்
நினைவுகள் தடமாய்….

தேடலும் கொடுத்தலுமாய்…
நானும் என்தேசமும்
பிணைந்திருக்கிறோம் …..!!

Related Articles

Leave a Reply

Back to top button