தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நயனுக்கு வாழ்த்து கூறியுள்ள அவரின் காதலர் விக்னேஷ் சிவன் ‘ஹேப்பி பர்த்டே கண்மணி, தங்கமே மற்றும் என் எல்லாமே… உன்னுடைய வாழ்க்கை முழுமைக்கும் அன்பும் பாசமும் நிறைந்தது. நீ என்றென்றும் அழகாக இருக்க கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். என கூறி வாழ்த்தியிருந்தார்.
நயன் தற்போது விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார்.
இன்று பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு குழுவினருடன் நயன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இதில், விக்னேஷ் சிவன், சமந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு சமந்தா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘அவள் வந்தாள்… அவள் பார்த்தாள்…அவள் துணிந்தாள்…அவள் கனவு கண்டாள்…அவள் திறமையை காட்டினாள்….அவள் வெற்றி பெற்றாள்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன்’ என பதிவிட்டுள்ளார்.