உலகம்செய்திகள்

கொவிட் தொடர்பில் WHO வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

WHO

உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுமாயின், கொரோனா வைரஸின் தீவிரமான தாக்கம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரஸ் அதனோம் கெப்ரேயஸ் கூறுகிறார்.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

இதனை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோமாயின், தீவிரமான கட்டம் உண்மையில் முடிவுக்கு வந்துவிடும், அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது எமது கைகளிலேயே உள்ளது. இது வாய்ப்புக்கான விடயம் அல்ல. இது தேர்வுக்கான விடயம் என்றார்.

70 சதவீதமானோக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை, ஜூன் அல்லது ஜூலைக்குள் அடைய எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு நிகழுமாயின் கொவிட் தொற்றின் தீவிர தாக்கத்தை நிச்சயமாக முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button