இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள திருகுமார் நடேசன்

பெரும் சர்ச்சைக்குரிய வகையில் சொத்துக்களை சேர்த்தமை சம்பந்தமாக பன்டோரா ஆவணங்கள் மூலம் தனக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இருப்பதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக திருகுமார் நடேசன்(Thirukkumar  Nadeshan) தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்நு நேற்று சென்று வழங்கிய போதே நடேசன் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.

இரண்டாவது முறையாக நேற்று வெள்ளிக் கிழமை ஆணைக்குழுவிற்கு சென்ற நடேசன், அங்கு நான்கு மணி நேரம் இந்த ஆணைக்குழுவின் அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பதிலளித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் பதிலளித்துள்ள திருகுமார் நடேசன்,

தனக்கு சொந்தமான உள்நாட்டில் உள்ள சொத்து விபரங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட முடியும் எனவும் எனினும் பன்டோரா ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ள சொத்து குவிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை பொய்யான குற்றச்சாட்டுக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு தேவையெனில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துமாறும் அவர் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளார்.

பன்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள திருகுமார் நடேசனின் மனைவியான முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்சவும்(Nirupama Rajapaksha) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்து விசாரிக்கப்படவுள்ளதுடன் அதற்கான அழைப்பாணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்படும் என ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button