இலங்கைசெய்திகள்

எரிவாயு சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை!!

laugfs

எரிவாயு தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதுடன்இ நாட்டிற்குக் கொண்டுவரப்படும் அனைத்து எரிவாயுக்களையும் ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு வந்துள்ள லாப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலின் எரிவாயு சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று இரவு 9.30 மணியளவில் கப்பலுக்குச் சென்று ஆய்வுகளை ஆரம்பித்ததாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி அதன் மாதிரிகள் நுகர்வோர் அதிகாரசபையின் ஆய்வகங் களில் பரிசோதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான கப் பலிலிருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகளைத் தொடர்ந்தும் ஆய்வுக் குட்படுத்தி வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித் துள்ளது.
அங்கீகார சபையினால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button