இலங்கைசெய்திகள்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் 2021ம் ஆண்டுக்கான “தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்”

Vavuniya

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்து கொண்ட 2021ம் ஆண்டுக்கான “தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்” நவம்பர் 27 இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கடற்புலி கப்டன் கிருபன், மேஜர் நகுலன் ஆகியோரின் உறவினரும், முன்னாள் போராளியுமாகிய பார்த்தீபன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கச் செயலாளருமாகிய கோ.ராஜ்குமார் அவர்களுக்கு நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு வவுனியா பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்களால் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 2021ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button