இலங்கைசெய்திகள்

மாற்றம் வேண்டுமன தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உப்புவெளி பிரதேச சபையில் தவிசாளர் மாறினாரே தவிர வேறு எதுவும் மாறவில்லை- பிரதேசபை உறுப்பினர் நிசாந்தன்!!

uppuveli

தமிழர்களைக் பெரும்பான்மையாகக்கொண்ட உப்புவெளிப்பிரதேச சபையானது தமிழ் தவிசாளரை தோற்கடித்து சிங்கள தவிசாளரை மாற்றிய பிரதேச சபையாகும்.ஓ தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தவிசாளரின் பாதீடு கடந்த ஆண்டு தோற்கடிக்கப்பட்டு பொதுஜன பெரமுன கட்சியின் சிங்கள உறுப்பினர் தவிசாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தமிழரசுக் கட்சியின் பிரசே சபை உறுப்பினர் திரு.நிசாந்தன் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாண்டு சமர்ப்பக்கப்பட்ட பாதீடானது, கடந்த ஆண்டு இவர்களால் தோற்கடிக்கப்பட்ட பாதீட்டை ஒத்ததாகவே இருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்லாம் என்றும், இரண்டு மில்லியன் ஓதுக்கீீட்டு நிதி வழங்கப்படும் எனும் காரணத்தைக் கூறி சில தமிழ் உறுப்பிர்கள் மாற்று அணிக்குத் தாவித் தமிழ் தவிசாளரைத் தோற்கடித்து சிங்களத் தவிசாளரைக் கொண்டுவந்தனர். ஆனால் என்ன மாற்றம் வந்தது? தமிழ்ப் பகுதியில் என்ன அபிவிருத்தி செய்யப்பட்டது? எனக் கேள்வி எழுப்புகின்றார்.

தமிழர்களை ஓரம்கட்டி, சிங்களவரைத் தலைவராக்கியதைத் தவிர எந்த நன்மையும் ஏற்படவில்லை. மாறாக சிங்கள் பகுதியில் வேலைத் திட்டங்கள் பல நடைபெறுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஏ.ஜே.எம்.சாலி
திருகோணமலை

Related Articles

Leave a Reply

Back to top button