பருப்பு, சீனி, வெங்காயம், கிழங்கு ஆகியவற்றின் விலைகள் கணிசமாக குறைவடைந்துள்ளதாக கொழும்பு, – புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட பருப்பு 410 ரூபாயாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஏனைய பொருட்களும் கணிசமாக குறைவடைந்துள்ளதாகவும் டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும் வங்கிகள் டொலர் வழங்குவது காரணமாக இந்த விலைக்குறைப்பு இடம்பெற்றுள்ளது என கூறப்படுகிறது.