இலங்கைசெய்திகள்

மக்கள் வீதியில் – தென்னிலங்கை அரசியல்வாதிகள் பங்களாவில் குதூகலத்தில்!!

Southern politicians

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்கள் வீதிக்கு இறங்கி கொட்டும் மழையிலும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் நாடாளுமன்றத்தினால் நடத்தப்பட்ட வரும் பங்களாவில் தங்குவதற்காக அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த பங்களாவின் அனைத்து நடவடிக்கைகளும் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை பிரிவினாலேயே நடத்தி செல்லப்படுகின்றது.

19 அறைகளுடன் ஆடம்பரமான அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த பங்களாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு நேரத்தில் 3 அறைகளை 3 நாட்களுக்காக ஒதுக்கிக் கொள்ள முடியும்.

இதேவேளை, சில உறுப்பினர்கள் இந்த பங்களாவில் தங்கள் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கும் அறைகளை ஒதுக்கியுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button