ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கைப்பற்றப்பட்ட 3,000 லீற்றர் மதுபானத்தை அங்குள்ள கால்வாயில் ஊற்றி அழித்துள்ளனர்.
இது தொடர்பான காணொளிகளையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
இதனால் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவரிசையில் மதுபானம் அருந்தவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதை பொருள் கடத்தலை தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் காபூலில் மதுபானங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கண்டுப்பிடிக்கப்பட்ட 3,000 லீற்றர் மதுபானத்தை அங்குள்ள கால்வாயில் ஊற்றி அழித்துள்ளனர்.