இலங்கைசெய்திகள்

வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்!!

Strike struggle

வவுனியா பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்றையதினம் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பிரதான வாயிலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

நீண்டகாலமாக 107 வீத சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றோம். அந்தவகையில் அரசாங்கம் கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக தீர்ப்பதுடன், முன்னமே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் 107 வீத அதிகரிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்களுக்கு தீர்வை வழங்கு, மற்றும் 107 வீத சம்பள அதிகரிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்து சம்பளமுரண்பாட்டை தீர்க்கும் குழுவின் அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button