18 ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு.
அன்றைய தினம் – எம்பீக்களின் வாக்கெடுப்பின் மூலம் – புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று சகல கட்சிகளின் பங்களிப்புடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனாதிபதி – அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை பதவி வகிப்பார்.
13 ஆம் திகதி – கோட்டபாய ராஜபக்ஷ இராஜினாமா செய்ததை அடுத்து – 18 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரையான 5 நாட்களுக்கும் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் அல்லது சபாநாயகர் மஹிந்த யாப்பா ஆகிய இருவருள் ஒருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்படி விடயங்கள் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
புதிய அமைச்சரவையில் 10 பேர் மாத்திரமே அங்கம் வகிப்பர்.
போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன எனினும் இவை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.