எழுர்ச்சி மிக்க உணர்வைத் தூண்டுவதிலும் மனதிற்கு இனிமையைத் தருவதிலும் பாடல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. உலகமே இன்று பார்க்கின்ற ஒரு விடயமாக மாறியுள்ளது ரஷ்ய – உக்ரைன் யுத்தம். பலருக்கும் தெரியாமல் இருந்து உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று உலகமே அறிந்துகொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய இசைக்கலைஞர்கள் உக்ரைனுக்காக ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் புகழ்பெற்ற ரொக் இசைக்குழுவான பிங்க் ஃபிலாய்ட் உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு பாடலை வெளியிட்டுள்ளது.
அந்த ட்ராக் “ஹே ஹே ரைஸ் அப்” என்று அமைந்துள்ளது.
இந்தப் பாடல் உக்ரைனிய இசைக்குழுவான பூம்பாக்ஸின் குரல்களைக் கொண்டுள்ளது.
உக்ரைனிய தலைநகரில் உள்ள சோபியா சதுக்கத்தில் உக்ரைன் நாட்டு பாதுகாப்பு படைவீரரான ரொக் பாடகர் ஒருவர் பாடிய பாடலே தம்மை இந்த முயற்சிக்கு ஈர்த்ததாக ரொக் இசைக்குழுவான பிங்க் ஃபிலாய்ட் தெரிவித்துள்ளது.
1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிங்க் ஃபிலாய்டின் முதல் பாடல் இதுவாக அமைந்துள்ளது.
இந்த பாடலின் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானம் அனைத்தும் உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிக்காகச் செல்லும் என்று ரொக் இசைக்குழுவான பிங்க் ஃபிலாய்ட் தெரிவித்துள்ளது.