இலங்கைசெய்திகள்

ரோஹித ராஜபக்ஷ LPL பயிற்சி போட்டிகளில் பங்கேற்பு!!

rohitha rayaphxa

2021 லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து நாட்களில் ஆரம்பமாகவுள்ளன.

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் பலம் வாய்ந்த பல வீரர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இவ்வருட போட்டிகள் விறுவிறுப்பானதாக அமையும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், போட்டிக்கான முன் பயிற்சியை அணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

அதற்கமைய, இம்முறை எல்.பி.எல் இப்போட்டியில் பங்குபற்றும் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் பயிற்சி போட்டியில் கலந்துகொண்டனர்.

சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிரோஷன் டிக்வெல்ல இந்தப் போட்டியில் இணைந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவும் தம்புள்ளை அணியுடன் பயிற்சிப் போட்டியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button