திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் அமைதியின்மை நிலவி வருகின்றது.
இந்த அமைதியின்மை இன்று (02) காலை முதல் நிலவி வருவதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.இதன்போது, அவரது ஆடை தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக, அந்த ஆசிரியை பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை ஸாஹிரா கல்லூரிக்கு தற்காலிகமாக அவரை இடமாற்றம் செய்யஅதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்;.
இவ்வாறான நிலையில் மனித உரிமை ஆணைக்குழு,நீதிமன்றம் என இழுபட்டு மீண்டும் நீதிமன்ற இனக்கப்பாட்டு அடிப்படையில் குறித்த ஆசிரியை, மீண்டும் ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு இடமாற்ற கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், அவர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்க பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார்.
இதன்போது, மீண்டும் பாடசாலை சமூகத்தாலும், பெற்றோர்களாலும்ஆசிரியரின் அபாயா ஆடை தொடர்பில் பிரச்சினை எழுப்பப்பட்டு பாடசாலை வளாகத்தில் அமைதியின்மை நிலமை ஏற்பட்டது.
இந்த அமைதியின்மையினால், பாடசாலையின் அதிபர் மற்றும் குறித்த ஆசிரியை ஆகியோர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.இதன்போது, மீண்டும் ஆடைத் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில், பாடசாலை வளாகத்தில் தொடர்ந்தும் அமைதியின்மை நிலவி வருகின்றது.
இந்த அமைதியின்மையினால், பாடசாலையின் அதிபர் மற்றும் குறித்த ஆசிரியை ஆகியோர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும். இந்த சம்பவத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல் நிலைமை பாரதூரமாக இல்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிலாவெளி நிருபர்ஏ.ஜே.எம்.சாலி