இலங்கைசெய்திகள்

சொந்த மகளைப் பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தண்டனை!!

Child abuse

மதுபோதையில் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

மெற்ற மகளையே பாலியல் வல்லுறவு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், அத்தகைய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் மதுபோதையில் வந்த தந்தையால் இவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

வவுனியா நீதவானின் உத்தரவின்பேரில் கடந்த 6 மாத காலமாக சிறுவர் இல்லமொன்றில் வசித்து வருவதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரி சட்ட வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

சிறுமியின் சாட்சியத்தை சட்ட வைத்திய அறிக்கை ஒப்புறுதி செய்வதாகக் குறிப்பிட்ட நீதிபதி இளங்செழியன் தந்தைக்கு 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கினார்.

அத்துடன் சிறுமிக்கு 3 லட்ச ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் 15 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.

இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறும் பட்சத்தில் 9 மாதக் கடூழிய சிறையும், தண்டப் பணம் செலுத்தத் தவறினால் 3 மாத கால சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் மா. இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.   

இச்சம்பவம் மாஙுகுளத்தில் இடம்பெறவுள்ளது. 11 வயதில் தந்தையால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சிறுமி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறுவர் இல்லத்தில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button