ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இருந்து ரஷ்யா இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் வெறி ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது வரை போர் முடிவுக்கு வரவில்லை.
உக்ரைனில் சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் பாதிப்படைந்து வருகின்றனர். தைரியமான மக்கள் என்ற அடையாளத்துடன் உக்ரைன் மக்களும் படையினரும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலிருந்து ரஷ்யாவை நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது.
ரஷ்யாவை மனித உரிமை சபையில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுத்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் விழுந்தன. இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
வாக்கெடுப்பு முடிவில் ரஷ்யா ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.