இலங்கைசெய்திகள்தொழில்நுட்பம்பிரதான செய்திகள்

இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள் – நாமல்

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய அடையாள அட்டை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தொிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த ஆண்டு முதல் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள் பொது மக்களுக்கு வழங்கப்படும்.

அத்துடன் எதிர்காலத்தில் வீதிப்போக்குவரத்து அபராதங்கள் கூட டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button