இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

புதிய பிறழ்வான டெல்டா பிளஸ் தொடர்பில் சுகாதார நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல்

டெல்டா வகையின் புதிய பிறழ்வான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று நாட்டின் சுகாதார நிபுணர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவர், வைத்தியவர் சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) இதனை தெரிவித்துள்ளார்.

ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் டெல்டா ப்ளஸ் இலங்கையில் பரவியுள்ளமை காட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் இலங்கையின் கோவிட் பிறழ்வுகளை வரிசைப்படுத்தும் மையமாக விளங்குவதாக குறிப்பிட்ட அவர், அந்தவகையில், இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் டெல்டா ப்ளஸ் கண்டறியப்படவில்லை என்றும் ட்வீட் செய்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button