இலங்கைசெய்திகள்

புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார் ரணில்!!

Ranil wickramasinghe

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் நிலை காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் பதவி விலகலுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்த பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவிக்கு வேறு சிலரும் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button