இலங்கைசெய்திகள்

11 ரயில் சேவைகள் இரத்து!!

Railway service closed

 ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பால் இன்று (10) மாலை 11 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

திட்டமிடப்பட்ட அலுவலக ரயில்கள் மற்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (9) நள்ளிரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் பதவி உயர்வினை கண்டித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button