இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

கட்சிகள் கோரினால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டிடுவேன்; சி.வி.விக்னேஸ்வரன்!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்று நம்பிக்கையில்லை என்ற தெரிவித்த சி.வி.விக்னேவரனிடம் ஊடகவியாளர்கள், மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர்,

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகள் இணைந்து மாகாணசபைத் தேர்தலில் முதமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு கோரிக்கை முன்வைத்தால் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button