இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் நிபுணத்துவ ஆலோசனை கோரும் இலங்கை!!

Professional advice

பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாகவும், அதற்கிணங்க நிபுணத்துவ குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் திட்டம் தொடர்பில் இன்று (2) ஊடக சந்திப்பொன்றின்போது,  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அதிகாரபூர்வமாக எதையும் செய்யவில்லை.  அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர்களிடமிருந்து நிபுணத்துவ ஆலோசனையைப் பெறவுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியம் என்பது நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் நாடுகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு சர்வதேச நிறுவனம் ஆகும்.

அந்நிறுவனம் எங்களுக்குத் தெரியாத விடயங்களைப் பற்றி ஆலோசனை வழங்கும். நாம் அதனை ஏற்றுக்கொள்கிறோமா என்பது வேறு விடயம்.

நாம் செல்வதற்கு முன், அவர்கள் என்ன கொடுக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக் கடனைப் பெற எந்தவொரு வங்கிக்குச் செல்வதற்கு முன்பும் நாம் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button