இலங்கைசெய்திகள்

கைவிடப்பட்டது தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!

Principal of rail way station

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று (28) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டதையடுத்து கடந்த 5 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய தொடருந்து நிலைய அதிபர்கள் நாளை (29) முதல், பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

25 கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம், பொதிகள், எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மா பரிமாற்றும் நடவடிக்கைகளையும், சாதாரண தொடருந்து பயணச்சீட்டு வழங்கும் செயற்பாடுகளையும் தவிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button