இலங்கைசெய்திகள்

தேவாலயம் மீதான தாக்குதல் – மக்களிடம் அருட்தந்தை ஜேசுரட்ணம் முக்கிய கோரிக்கை!!

nawanthurai church

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய சொரூபங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது யாழ்.கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல. ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் மேலும் கூறியுள்ளதாவதுஇ “புனித அந்தோணியார் சிற்றாலயம்இ இன்று அதிகாலை மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலை செய்தவர் ஏற்கனவே எமக்கு அறிமுகமானவர் என்பதுடன் அவர் ஒரு மனநோயாளி. நீண்ட காலமாக இந்த ஆலயத்திலேயே தங்கியுள்ளார்.

நாங்கள் பலமுறை அவரை வெளியேற்ற பார்த்தோம். ஆனால் அவர் போகவில்லை. இது வேண்டுமென்று செய்யப்பட்ட ஒரு விடயம் அல்ல. ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும்.

அவரை பொலிஸார் நேரடியாக கைது செய்துஇ பின்னர் எனக்கு அறிவித்திருந்தார்கள்.

நான் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளேன். அதனுடைய தொடர்ச்சியான நடவடிக்கையினை பொலிஸார் எடுப்பார்கள்

ஆகவேஇ இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button