யுக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.
மேலும் யுக்ரைன் இராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் இரண்டாவது முறையாக இன்று தொடங்கியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், யுக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐ.நா பாதுகாப்பு சபையின் அறிவுரையையும் மீறி யுக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.