
நாட்டில் இன்று முதல் நாளாந்தம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீர் மின் உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கான வழிமுறை இன்று பிற்பகல் அறிவிக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் மின்சாரத்தினை விநியோகிப்பதற்கு முறையான திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமெனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.