அது ஒரு பெருங்காடு
அங்கேதான்
அந்தப் பறவைக்கூட்டம்
இளைப்பாறிக்கொண்டிருந்தது.
தாய்ப்பறவைகளும்
குஞ்சுகளுமாய்
தனியத்தில் வாசத்தில் – அவை
தம்மை மறந்திருந்தன.
அம்புகளின் கூர்மையோடு
குவிந்திருந்த
அலகுகளில்
கொடுப்பதும் வாங்குவதுமாய்
ஒரு அன்பியல் பரிமாற்றம்….
காட்டின் ஒரு கரையில்
பெருஞ்சத்தமொன்று..
வல்லூறு ஒன்று
விலைபேசியது
பறவைக்கூட்டத்தை…
நரிகளின் ராட்சதவேடமும்
கழுகுகளின் கயமையும்
வல்லூறுகளின் துரோகமும்
தின்று தீர்த்தது
அந்தப் பறவைக்கூட்டத்தை..
அந்தக் காடு
இன்றும்
அழுதுகொண்டிருக்கிறது,
சிதைக்கப்பட்ட
பறவைகளின்
இறகுகளைப்பார்த்தபடி….
ஆற்று நீரோட்டத்தில் இருந்து
தப்பிப் பிழைக்கத்தெரியாத
அந்தப் பறவைகள்
ஒவ்வொன்றாய்
மூழ்கிக்கொண்டிருக்கின்றன…
கோபிகை.