உலகம்செய்திகள்

204 மில்லியன் அபராதம் செலுத்தவுள்ள சீன தொகுப்பாளினி!!

Penalty

வரி ஏய்ப்பு குற்றத்துக்காக சீனாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஹூவாங் வெய்யுக்கு 204 மில்லியன் அமெரிக்க டொலர் (41இ271 கோடி இல­ங்கை ரூபா) அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளமை பலருக்கும் பெரும் ஆச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஹூவாங் வெய். இவர் நேரலை ராணி என்று அழைக்கப்படுகிறார். இவரை சமூக வலைதளத்தில் 1.10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

ஹூவாங் வெய் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஹூவாங் வெய் வரி ஏய்ப்பு செய்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

பொழுதுபோக்கு துறையில் வரி ஏய்ப்புஇ தவறான தகவல்களை கொடுத்து அவர் தனது வருமானத்தை மறைத்து வரி செலுத்தாமல் இருந்துள்ளமை தெரிய வந்ததை அடுத்து அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் வரி ஏய்ப்பு குற்றத்துக்காக ஹூவாங் வெய்யுக்கு 204 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது. இது குறித்து ஹூவாங் வெய் கூறுகையில்

என்னிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வரிச்சட்டம் மற்றும் ஒழுங்குமுறையை நான் மீறி இருப்பதை உணர்ந்தேன். இதற்காக மிகவும் வருத்தம் அடைந்தேன். பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வருமானவரித்துறை விதித்துள்ள தண்டனையை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button