செய்திகள்தொழில்நுட்பம்

யார் இந்த பராக் அகர்வால்!!

parak akarval

இந்தியாவில் பிறந்த பராக் அகர்வாலுக்கு   37 வயதுதான் ஆகிறது. இதனால், உலகளவில் ரொப் 500 நிறுவனங்களின் C.E.O க்களிலேயே மிகவும் இளைமையானவர் என்ற அந்தஸ்தைப்  இவர் பெற்றுள்ளார்.

  • இந்தியரான பராக் அகர்வால் ஐஐடி-பாம்பேயில் பி.டெக் கணினி அறிவியல் பட்டம் பெற்றவர். அத்துடன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
  • 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டரில் விளம்பரப் பொறியாளராகச் சேர்ந்தார். விரைவில் அந்நிறுவனத்தின் ‘சிறந்த மென்பொருள் பொறியாளர்’ என்ற இடத்தைப் பிடித்தார்.
  • ட்விட்டர் 2018இல் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பராக் அகர்வாலை நியமித்தது.
  • ட்விட்டரில் சேருவதற்கு முன்பு, அவர் AT&T, மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ ஆகியவற்றில் ஆராய்ச்சி பயிற்சிகளை மேற்கொண்டார்.
  • நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், பராக் அகர்வால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலிக்கான் பள்ளத்தாக்கு தலைமை நிர்வாக அதிகாரிகளின் குழுவில் சேர்ந்துள்ளார், இந்த பட்டியலில் ஏற்கெனவே சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button