ஒமைக்ரொன் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 4,000 ஐக் கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 410 பேருக்கு ஒமைக்ரொன் தொற்று உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய, இதுவரையில் அங்கு ஒமைக்ரொன் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,033 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், இந்த வைரஸ் திரிபிலிருந்து 1,552 பேர் குணமடைந்துள்ளனர்.