இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையின் தேசியமலர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!
National flower

இலங்கையின் தேசிய மலர் அல்லி மலர் என்பது தொடர்பில் இன்னும் பூரண விழிப்புணர்வு ஏற்படவில்லை எனவும் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோப் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
2015 யூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையின் தேசிய மலர் அல்லி மலர் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போதும் சுற்றாடல் அமைச்சினால் சரியான முறையில் இவ்விடயம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை எனவும் கோப் குழு தெரிவித்துள்ளது.
தற்போதும் மக்களிடம் இலங்கையின் தேசிய மலர் நீல அல்லி என கருத்து உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.