இலங்கைசெய்திகள்

கைதான 3 இராணுவ சிப்பாய்களுக்கு பிணை!!

mullateevu

முல்லைத்தீவின் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர், நேற்றைய தினம் முள்ளிவாய்க்காலில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

சம்பவம் தொடர்பில், கைதான 3 இராணுவ சிப்பாய்கள் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள், இன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைகளின் பின்னர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பல்வேறு அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button