இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இரண்டு வாரங்களில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமைச்சரவைக்கு

இன்னும் இரண்டு வாரங்களில் உத்தேச புதிய அரசியலமைப்பு சட்ட வரைவு கலந்துரையாடலுக்காக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் நீதியமைச்சர் அலி சப்ரி(Ali Sabry), இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இந்த புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான சட்ட வல்லுநரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா(Romesh De Silva) தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக பிரதான அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை குழுவினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

எனினும் அரசியலமைப்புச் சட்ட வரைவு குழுவின் முன் நேர்நிலையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமது கட்சி, புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான யோசனைகளை முன்வைக்காது என அறிவித்தது.

எவ்வாறாயினும் அரசியலமைப்புச் சட்ட வரைவை அமைச்சரவைக்கு தாக்கல் செய்து, நீண்ட கலந்துரையாடலுக்கு உட்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அடுத்தாண்டு நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) அண்மையில் அனுராதபுரத்தில் தெரிவித்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button