கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

எல்லா பருவத்தினரும் அழுத காட்சி மறக்க முடியாது – செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு . திருமுகன்!!

MR.Anpalakan

இறைவன் படைத்த இனிய பிறவி, புகழின் உச்சிக்குச் சென்ற ஆசிரியர். பல்லாயிரம் மாணவர்கள் அகத்தில் வாழும் ஆத்மா. இப்படி எத்தனையோ அவரைப்பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.  என் செய்வது அன்பழகனின் பிரிவு என்பது யாழ். குடாநாட்டை ஏங்கவைத்துவிட்டது. எல்லாப் பருவத்தினரும் அழுத காட்சி மறக்க முடியாதது.

பல வருடங்களாக யாழ்.  இந்து ஆரம்ப பாடசாலையைப் பெருமைப்படுத்திய சாதனையாளராக மட்டுமன்றி ஏனைய பாடசாலை மாணவர்களையும் சாதனை படைக்க வைத்த நிபுணன். ஆடிப்பாடி ஆனந்தமாக வகுப்பை நடாத்தி  தன் பெருமையை நிலைநாட்டிய ஒரு வித்தகனை இனி எங்கே சந்திப்போம்?
தன் வித்துவத்தால், எத்தகைய உயர்பதவி வகித்தவர்களையும் தனது கலாசாலை வாசலி லே காத்திருக்கச்செய்த கல்வியாளன். அன்பழகனிடம்   பிள்ளைகளை ஒப்படைத்தால் போதுமென்று பெற்றவர்கள் அனைவரையும் நாடி ஓடி வரவைத்தாய்.

எல்லாமே கண்ணூறு பட்டது போல கதை முடிந்ததே. அன்பழகனே, ஆறுதல் கொள்வாய் மகனே…
உனது ஆற்றல் விண்ணுலகத்திற்கும் தேவைப்பட்டுவிட்டது. எம் மண்ணில் ஏதோ தவக்குறைவு, உன்னைப் பாதி வயதில் இழந்துவிட்டோம்.

அன்னாரின் மனைவி,  பிள்ளைகள்,  உறவுகளுக்கு இறையருளால் ஆறுதல் கிடைக்க பிரார்த்தித்து , அன்பழகனின் ஆத்மா இறையடியில் நிரந்தர நிம்மதியடையப் பிரார்த்தித்து அமைகிறேன். 

கலாநிதி.  ஆறு திருமுருகன்.
தலைவர்,
ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்.
தெல்லிப்பளை.
தலைவர்- சிவபூமி அறக்கட்டளை.
இலங்கை.

புலமைச்சிகரம் அமரர் ஆசிரியர் வே. அன்பழகன் அவர்களின் நினைவுப் பகிர்விற்காக அன்னாரின் கல்வெட்டிலிருந்து எடுக்கப்பட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button