துயர் பகிர்தல்நினைவு அஞ்சலி

மட்டுவில் , பொன். நாகமணி அவர்களின் நினைவுச் செதுக்கல் – கால்நூற்றாண்டு கடந்தும் கலையாத கனவுகள்!!

Memorial engraving

பண்பினிய பேராளன்….
கொடை மனம் கொண்ட தாராளன்
வளர்மதிக்கு கருவூட்டிய தந்தையே……
பூரித்து நிற்கிறது
பெருமரமாய் உம் மகவு…

சமூக வளர்ச்சி
கல்வித்திறன்னுடன் விளையாட்டு
மன இணக்கம்
அத்தனையும் உயர்ந்தோங்கி…
செழித்திடச் செய்கிறது
வளர்மதி…

எண்ணத்தில் விதை தூவி
திண்ணமாய் செய்துவைத்து
வண்ணக்கனவுடனே
வாழுந்தடம் பதித்தீரையா….

கனவுகள் கனிந்துவரும்
பொற்காலம் இதுவன்றோ….
கால் நூற்றாண்டு கடந்தாலும்
கலையவில்லை உம் நினைவுகளோ…

கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி
அஞ்சலிக்கிறோம்….
இந்நாளில்…..
ஓம் சாந்தி..சாந்தி…

நிர்வாகம்
மட்டுவில் வளர்மதி சனசக நிலையமும்
ஏனைய உப அமைப்புகளும்…
05.12.2021.

Related Articles

Leave a Reply

Back to top button