அன்னை மொழியே
அழகின் உருவே
அன்பின் வடிவே
எங்கள் மூச்சே…
காலன் கவர்ந்து சென்று
மாதம் ஒன்று கடந்ததுவோ,
ஈரம் காயாத விழிகள்
இன்னும் தேடுதே
அருகில் அம்மா வேண்டும் என்ற
ஆறாத ஆசையோடு…
மட்டுவில் பெற்றெடுத்த
மகத்தான பேரணங்கே
அன்பினால் ஊர் நிறைத்த
உன்னத வண்ணமே…
கலைந்த காலமிது
பொய்யாகிப் போகாதோ…
மீண்டும் எம்மோடு
கூடி மகிழ மாட்டீரோ..
ஏங்கி அழுகிறோம்….
அம்மா…
மாயப்பூங்குழலாய்
மறைந்தது ஏன் அம்மா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்….
அன்புடன் குடும்பத்தினர்