குமார் சங்கக்காரவை மகிந்த ராஜபக்ச தாக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியில் உண்மை இல்லை என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, குமார் சங்கக்காரவைத் தாக்கியுள்ளதாகவும் அதனாலேயே அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்ததாகவும் பரப்பப்பட்ட தகவலை மறுத்துள்ள சங்கக்கார, “குறித்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இவ்வாறான செய்தியைப் பரப்புவோர் அது குறித்த ஆதாரங்கள் இருந்தால் முன்வைக்க வேண்டும்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.