இலங்கைசெய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற 7வது சர்வதேச ஆய்வு மாநாடு – துணைவேந்தர் முகாமைத்துவ வணிக பீடத்திற்கு புகழாரம்!!

Jaffna university

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஏழாவது மாநாடு நேற்று ஜூலை 14ஆம் திகதி, வியாழக்கிழமை, முற்பகல் 9.00 மணிக்கு முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

“புதிய இயல்பில் மீள்தன்மைக்காக வணிகத்தை மாற்றுதல்” ( Transforming Business for Resilience in New Normal )” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஆய்வு மாநாட்டில் ஆஸ்திரேலியாவின் சதேர்ண் குறொஸ் பல்கலைக் கழக ( Southern Cross University) தகவல் அமைப்புகள் முறைமைப் பேராசிரியர் தர்சனா செடெரா நிகழ்நிலை வாயிலாக முதன்மை உரையாற்றினார்.

கணக்கியல் மற்றும் நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி, முயற்சியாண்மையும் புதியன புனைதலும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், மனித வள முகாமைத்துவம் மற்றும் நிறுவன கற்கைகள், கற்றல் கலாச்சாரம் மற்றும் சமூகம் ஆகிய 07 உப பிரிவுகளின் கீழ் 43 ஆய்வுக் கட்டுரைகள் இவ் ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றுடன், மாணவர்களின் அறிவு மற்றும் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் ஆய்வு மாநாடும் (Student Research Symposium) இடம்பெற்றது. இம் மாநாட்டில் மாணவர்களால் 6 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.இந்த நிகழவில் துணைவேந்தர் சுய ஊக்கத்திற்கான ஒரு சிறப்பான பேச்சை வழங்கி நிகழ்வை சிறப்பித்ததுடன்
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும் இவ்வாறான பெறுமதியான பொருளாதார விழிப்புணர்வு சார்ந்த விடயத்துடன் சிறப்பான ஏற்பாட்டையும் செய்து மாணவர்கள் மத்தியில் பொருளாதார முக்கியத்துவத்தை விதைக்கும் முகாமைத்துவ. வணிக பீட மாணவரகளையும் விரிவுரையாளரகளையும் துணைவேந்தர் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் அனைத்து பீடங்களின் பீடாதிபதிகளும்
விருந்தினர்களாகப் பங்குபற்றி நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button