இலங்கைசெய்திகள்விளையாட்டு

அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி சூப்பர்-12 சுற்றுக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.

நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்றின் 8வது ஆட்டத்தில் அயர்லாந்து – இலங்கை அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை குவித்தது.

வனிந்து ஹசரங்க அதிகபட்சமாக 71 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதிபெற்றது.

Related Articles

Leave a Reply

Back to top button