ஆன்மீகம்செய்திகள்

யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’

jaffna

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள் (ரொறன்ரோ, கனடா) அவர்களின் அனுசரணையுடன் சமயஜோதி திரு.கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில்
ஏழாவது சொற்பொழிவு நிகழ்வு திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்க அறநெறிப் பாடசாலை மண்டபத்தில், 18.02.2022 – வெள்ளிக்கிழமை பி.ப.3.00 மணிக்கு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி நகுலா ரபேந்திரராசா அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நாவலர் குருபூஜை, மற்றும் தலைமையுரை நிகழ்வுகளைத் தொடர்ந்து, ” சைவ சமய மறுமலச்சியின் தந்தை நாவலர் ” எனுந் தொனிப்பொருளில் சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர் செ.த.குமரன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவிலிருந்து வினாக்கள் தொடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பாராட்டுப் பரிசில்கள் வழங்களும் இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button