இலங்கைசெய்திகள்

போலி நாணயத் தாள்களை அச்சிடும் இயந்திரம் சிக்கியது!!

Jaffna

 ஞாயிற்றுக்கிழமை (08) இரவு 8 மணியளவில்  போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்தை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற முற்பட்ட வேளை அதன் உரிமையாளரான  யாழ் இளைஞர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், போதனா மருத்துவமனை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை மாற்ற முற்பட்ட வேளை தே இவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம், பளை பகுதியில் வைத்து 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கும் யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டவருக்கும் தொடர்பு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பான விசாரணை  நீதிமன்றத்தினால்  குற்ற விசாரணைப் பிரிவுக்கு (சிஐடி) மாற்றப்படவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button