இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

எந்தவொரு கட்சியினாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன

நாட்டில் எந்தவொரு கட்சியினாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது எனவும் தனித்துப் பயணிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

பெத்தகம பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் இருக்காமையே இன்று நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடிக்கக் காரணமாகும். இன்று நாடு முழுவதிலும் ஆசிரியர்கள், விவசாயிகள் எனப் பலரும் போராட்டங்களை நடாத்தி போராட்ட அலையொன்று போல் ஒன்று உருவாகியுள்ளது.

இந்த போராட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளே பொறுப்பு சொல்ல வேண்டும். அவர்கள் மக்கள் மத்தியில் செல்வதில்லை, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதில்லை.

ஒவ்வொரு கட்சிகளையும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நாட்டில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்தால் அது மோசமான நிலைமையாகும். பொருட்களின் விலைகள் அதிகரிப்பதனை கட்டுப்படுத்த வேண்டும்.

பொருட்களின் விலையைக் குறைக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோரியுள்ளோம் எனினும் இதுவரையில் அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை.

நாம் மாவட்ட ரீதியாகச் சென்று கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button